மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடந்து வரும் நிலையில் இன்றுடன் மூன்று நாள் மாநாடு நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்த எம்பி சு வெங்கடேசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநில அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தொடங்கி வைத்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்த மதுரை எம்பி சு வெங்கடேசன் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வெங்கடேசன் அவர்களை மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியர் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்ததாகவும் கட்சியில் உள்ள பிரபலங்கள் நலம் விசாரித்ததாகவும் தற்போது அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.