அர்ச்சகர்களுக்கு அரசு சம்பளம். தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2017 (06:17 IST)
தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரசேகரராவ் முதல்வராக பதவியேற்றதில் இருந்தே அம்மாநில மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்து மக்களின் நன்மதிப்பை பெற்று வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.



 
 
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் கோவிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளார். வரும் நவம்பர் முதல் இந்த நடைமுறை அமல்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த அறிவிப்புக்கு அர்ச்சகர்கள் மகிழ்ச்சி அடைந்து தங்களுடைய நன்றியை முதல்வருக்கு தெரிவித்துள்ளனர். அடுத்த மாதம் முதல் அர்ச்சகர்களும் அரசு ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் அனைத்து மாநில அரசுகளும் அர்ச்சர்களுக்கு அரசு சம்பளம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்க விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்