ஆன்லைனில் ரம்மி விளையாடினால் சிறை தண்டனை - நெட்டிசன்கள் அதிர்ச்சி

வியாழன், 13 ஜூலை 2017 (17:47 IST)
இணையத்தில் ரம்மி சீட்டு விளையாடினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெலுங்கானா அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது.


 

 
சீட்டு விளையாடுவது போன்ற சூதாட்டங்களுக்கு எந்த அரசும் அனுமதி அளிப்பதில்லை. இந்நிலையில், ஆன்லைனில் ரம்மி விளையாடினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தெலுங்கானா அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது.
 
இது தொடர்பான மசோதா கடந்த மாதம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு தற்போது ஆளுநர் நரசிம்மன் ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து, அந்த மசோதா சட்டமாக்கப்பட்டுள்ளது.
 
தெலுங்கானாவில் பலரும் ஆன்லைனில் ரம்மி எனும் சீட்டு விளையாட்டி ஆடி ஏராளாமான பணத்தை இழப்பதாக புகார் எழுந்ததோடு, அவர்கள் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர் என்பது தெரியவந்தது. எனவேதான், இந்த உத்தரவை தெலுங்கானா அரசு பிறப்பித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்