அரசியல்வாதிகள் என்னை கறிவேப்பிலை போல் பயன்படுத்தி தூக்கி எறிந்துவிட்டார்கள்: பிரபல நடிகை

புதன், 31 மே 2017 (04:14 IST)
மார்க்கெட் இழந்த நடிகர், நடிகைகளின் அடுத்த டார்கெட் ஒன்று தொலைக்காட்சி, இரண்டாவது அரசியல். அந்த வகையில் அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை நடிகர், நடிகைகள் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் அரசியலில் ஜொலித்தார்களா? என்றால் இல்லை. பலர் வெறும் பேச்சாளர்களாகவே கடைசி வரை இருக்கின்றனர்.



 


இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகள் என்னை கருவேப்பில்லை போல் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிட்டதாக கதாநாயகி முதல் அம்மா வேடம் வரை நடித்த நடிகை கவிதா ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்

தற்போது ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து பணியாற்றி வரும் நடிகை கவிதா பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘‘கட்சியில் என்னை யாரும் மதிப்பதில்லை, பெண்களுக்கு இந்தகட்சியில் மரியாதை இல்லை. எதற்காக இக்கட்சியில் நான் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்? எதிர்கட்சியாக இருந்தபோது என்னை அரசியல் மேடைகளில் பேச பயன்படுத்திக் கொண்டனர். ஆட்சிக்கு வந்தபின் என்னை ஓரம் கட்டத் தொடங்கினார்கள். 2 ஆண்டுக்கு முன்பும் இதேபோன்ற அவமானத்தை சந்தித்தேன்.

தற்போது நடக்கும் கட்சி மாநாட்டில் என்னை கலந்து கொள்ளச் சொல்லி எம்எல்ஏ ஒருவர் அழைத்தார். ஆனால் மேடையில் அமர்ந்திருப்பவர்கள் என்னைமேடை அருகேகூட விடமாட்டார்கள். சந்திரபாபுநாயுடு முதல்வர் ஆவதற்காக நான் கடுமையாக உழைத்தேன். இன்று என்னை நன்றாக பயன்படுத்திக் கொண்டு கறிவேப்பிலை போல் தூக்கி எறிந்து விட்டனர் ‘‘என்று நடிகை கவிதா கண்ணீருடன் பேட்டியளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்