நாய்களிடம் சிக்கி கடி வாங்கிய பிரபல நடிகை...

Webdunia
வியாழன், 26 ஜனவரி 2017 (17:24 IST)
பல நாய்கள் ஒன்று கூடி நடிகை பருல் யாதவை கடித்துக் குதறிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
நடிகை பருல் யாதவ், மலையாள படம் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். மலையாள நடிகர் பிருத்விராஜ் நடித்த கிருத்யம் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக இவர் நடித்தார். அதன் பின் தற்போது அவர் கன்னட படங்களில் நடித்து வருகிறார்.


 

 
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை மும்பையில் உள்ள தனது வீட்டின் அருகில், தான் வளர்க்கும் நாய்க்குட்டியை கூட்டிக் கொண்டு வெளியே சென்றார். அப்போது, ஒரு தெருவில் கூட்டமாக நின்ற சில நாய்கள் பருல் யாதவ் மீது பாய்ந்து கடித்திக் குதறின. இதல் அவரின் முகம், கை, கால் ஆகிய இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்