பங்குச்சந்தைக்கு இன்று விடுமுறை.. என்ன காரணம்?

Siva
புதன், 26 பிப்ரவரி 2025 (11:17 IST)
இன்று நாடு முழுவதும்  மகா  சிவராத்திரி கொண்டாடப்படுவதை அடுத்து, பங்குச் சந்தைக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இன்று மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை இரண்டுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரி நாளன்று இந்திய பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அன்றைய தினம் எந்தவித பங்குகளும் பணப் பரிமாற்றமும் செய்யப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களை போலவே, மகா சிவராத்திரி உள்பட சில முக்கிய தினங்களில் பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில், இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, இதனால் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பங்குச் சந்தை வணிகம் சரிந்து வரும் நிலையில், ஆறுதல் அளிக்கும் வகையில் நேற்று பங்குச் சந்தை முடிவின்போது சில புள்ளிகள் உயர்ந்தது. ஆனால் அதே நேரத்தில், பங்குச் சந்தை தொடர்ந்து முன்னேறுமா? என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவும், தொடர்ச்சியான சரிவு காரணமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் ஏராளமான பணத்தை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்