கன்னியாகுமரி அருகே திடீரென காட்டுத்தீ.. மகளிர் கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு..!

Siva

திங்கள், 24 பிப்ரவரி 2025 (16:58 IST)
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே சுங்கண்டை மேற்கு தொடர்ச்சி மலையில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மலையடி வாரத்தில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு மகளிர் கல்லூரிக்கு இரண்டு நாள் விடுமுறை என்று அறிவித்துள்ள கல்லூரி நிர்வாகம், மாணவிகளை உடனடியாக வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனையடுத்து மாணவிகள் உடனடியாக வீட்டுக்கு பாதுகாப்பாக சென்றனர்.

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீயணைப்பு துறையினர் மூலம் நடைபெற்று வருகின்றன. வனத்துறையினரும் அவர்களுக்கு உதவியாக இருக்கின்றனர்.

இருப்பினும், காய்ந்த பொருட்கள் மற்றும் மரங்கள் காரணமாக தீ வேகமாக பரவி வருவதால், தீயை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்