செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய 2018 ஆம் ஆண்டு அமெரிக்கா அனுப்பிய விண்கலம் மூலம், அங்கு 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பே கடற்கரை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே, செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜன், நீர், மண் உள்ளிட்ட அமைப்புகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தற்போது 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அங்கு தண்ணீர் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த கடல் நீர் பூமியில் உள்ள நீரைப் போல் உப்புத்தன்மை கொண்டதா, அல்லது சுவையான அம்சம் கொண்டதா என்பதைக் கண்டுபிடிக்க இன்னும் முழுமையான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கடற்கரையில் நல்ல தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டால், மனிதன் மிக விரைவில் அங்கு குடியேற அதிக வாய்ப்புகள் உள்ளன என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.