மாநிலங்களவை எம்பி ஆகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி அதிரடி முடிவு..!

Mahendran

புதன், 26 பிப்ரவரி 2025 (17:56 IST)
சமீபத்தில் நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநில முதல்வர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லூதியானா மேற்கு தொகுதி வேட்பாளராக வேறொருவர் நிறுத்தப்பட்டதை அடுத்து, அவர் பஞ்சாப் முதல்வராகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், தற்போது  அரவிந்த் கெஜ்ரிவாலை மாநிலங்களவை எம்பியாக மாற்றி, நாடாளுமன்றத்திற்கு அனுப்ப ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
தற்போது, லூதியானா மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சஞ்சீவ் அரோரா மாநிலங்களவை எம்பி ஆக இருப்பதால், அவர் வெற்றி பெற்றால் தனது பதவியை ராஜினாமா செய்வார். அந்த பதவி தான் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
 
இதுவரை டெல்லி சட்டமன்றத்தில் கலக்கிய அரவிந்த் கெஜ்ரிவால், இனி அடுத்து நாடாளுமன்றத்திலும் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்