தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை வாபஸ் பெற்றார் சரத்பவார்.

Webdunia
வெள்ளி, 5 மே 2023 (19:24 IST)
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை திரும்ப பெற்றுள்ளார் சரத்பவார்.

மகாராஷ்டிராவில் கடந்த 19919 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்த சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.

இந்த கட்சியை தொடங்கிய முதல் சரத்பவார் தலைவர் பதவியில் இருந்து வருகிறார் என்பதும் மகாராஷ்டிராவில் ஒரு வலுவான கட்சிகளில் ஒன்றாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் என்றும் ஆனால் அரசியல் இருந்து விகல விலகவில்லை என்றும் மக்களுக்காக பணியாற்றுவது தொடரும் என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், மூத்த அரசியல் தலைவரும், அனுபவமிக்கவவருமான சரத்பவார் விலகியது பேசு பொருளானது.

இந்த நிலையில், சரத்பவார் ராஜினாமா முடிவை ஏற்கமுடியாது என்று தேசியவாத காங்கிரஸ்  தலைவராக சரத்பவாரே தொடர வேண்டுமென்று அக்கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தில் தீர்மமானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனவே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை திரும்ப பெற்றுள்ளார் சரத்பவார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்