கர்நாடக சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

செவ்வாய், 2 மே 2023 (00:08 IST)
கர்நாடக மாநிலத்தில் 224 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்  வரும் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் வாக்குககள் வரும் மே 13 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இன்று பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், ப கர் நாடகாவில் 3 ஆண்டிற்கு கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும், ஆண்டிற்கு ஒருமுறை வயதானவர்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை செய்யப்படும் . உயர்மட்டக் குழுவின் பரிந்துரைப்படி பொதுசிவில் அமல்படுத்தப்படும். குடும்ப அட்டையுள்ளவர்களுக்கு தினமும் அரைலிட்டர் பால் இலவசம், ஏழைகளுக்கு  மாதம் தோறும் ரேசன் கடைகளில்  5 கிலோ பருப்பு, அரிசி வழங்கப்படும். பட்டியலின குடும்பத்தலைவிகளுக்கு வங்கிக் கணக்கில் 5 ஆண்டிற்கான ரூ.10 ஆயிரம் வைப்பு நிதி வைக்கப்படும். கர் நாடகாவில் ஒவ்வொரு நகராட்சியிலும் குறைந்த விலையில் தரமான உணவு வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்