ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணங்களை வைத்து அரசியல் செய்யவேண்டாம்… காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்!

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (11:14 IST)
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணங்கள் குறித்த சர்ச்சைகள் எழுவது தமிழக அரசியலில் வாடிக்கையாக இருந்து வருகிறது.

ராகுல் காந்தி இப்போது குறுகிய கால தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்குள்ளாகவே ராகுல் காந்தி புத்தாண்டை கொண்டாடுவதற்காக இத்தாலிக்கு சென்றுள்ளதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா ’இது ராகுலின் தனிப்பட்ட பயணம். அதுபற்றி ஊடக நண்பர்களும் பாஜகவினரும் வதந்திகளை பரப்பாமல் இருக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்