பண்டிட் தீனதயாள் உபாத்யாய பயிற்சி முகாம் ...ஏராளமானோர் பங்கேற்பு.

செவ்வாய், 28 டிசம்பர் 2021 (23:20 IST)
பண்டிட் தீனதயாள் உபாத்யாய பயிற்சி முகாம் கரூரில் துவக்கம் கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு.
 
கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின்  சார்பில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய  மூன்று நாள் மாவட்ட பயிற்சி முகாம் இன்று துவங்கியது. கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், பண்டுதகாரன்புதூர் பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் துவங்கிய இந்நிகழ்ச்சியானது கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி. செந்தில்நாதன் தலைமையில் துவங்கியது. 

இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம்  கலந்துகொண்டு வழிகாட்டினார்கள். மாநில இணை பொருளாளரும்,  கரூர் மாவட்ட பார்வையாளருமான சிவசுப்பிரமணியன் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் மாநில மாவட்ட,  ஒன்றிய,  நகர  என்று அனைத்து நிர்வாகிகளும், கலந்து கொண்டு வருகின்றனர். இந்த பயிற்சி முகாமானது மூன்று தினம் நடைபெறும் என்பதும், பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் தங்குமிடம், உணவு, படுக்கைகள் ஆகியவை அனைத்தும் கரூர் மாவட்ட பாஜக சார்பில் கொடுக்கப்பட்டு வருகின்றது. பயிற்சி முடிவில் பாஜக சார்பில் சான்றிதழ்களும் கொடுக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்