காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட ₹1000 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் பொம்மை அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (13:32 IST)
காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட ₹1000 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் பொம்மை அறிவிப்பு
காவிரி அணையின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ரூபாய் 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மேகதாதுவில் புதிய அணை கட்டக் கூடாது என தமிழக அரசு பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் தமிழகத்தின் எதிர்ப்பை மீறி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ரூபாய் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் விரைவில் அனைத்து ஒப்புதல்களையும் பெற்று அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்