தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் வசிப்பவர் ராஜ்குமார். இவரது மகன் ரஞ்சித் குமார். இவர் அங்குள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ராஜ்குமார் குடும்பத்துடன் ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர். அப்போது, ரஞ்சித்குமாரின் தங்கை ஆழமான தண்ணீர் செல்லும் பகுதிக்குச் சென்று தடுமாறியுள்ளார். ரஞ்சித்குமார் தண்ணீரில் இறங்கித் தனது தங்கையைக் காப்பாற்றியுள்ளார். ஆனால், அவரைக் காப்பாற்ற முடியவில்லை.அவரைத் தண்ணீர் அடித்துக்கொண்டு போனது. அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் உயிரிழந்தார்.