கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், நல்லூர் கிராமத்தில் உள்ள பிரபாகர், இவரது தோட்டத்தில், மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு நம்மாழ்வாரின் ஞாபகார்த்தமாகவும், அவரது பசுமைப்பணிக்கு புத்துயிரூட்டும் வகையில் ஈஷா காவிரி கூக்குரல் இயக்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையில் டிம்பர் மரக்கன்றுகளை நடும் பணி துவங்கியது. இந்நிகழ்ச்சியில் நம்மாழ்வார் அவர்களது நினைவினை ஞாபகப்படுத்தும் விதமாகவும் அவரது பசுமைப்பணியினை வரும் 2022 ம் ஆண்டு முழுவதும் செய்வோம் என்று ஈஷா காவிரி கூக்குரல் இயக்கம் வலியுறுத்தியது