கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டம் ரத்து: முதல்வர் சித்தராமையா அதிரடி..!

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (07:24 IST)
கர்நாடக மாநிலத்தில் கடந்த பாஜக ஆட்சியின் போது மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த சட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
 
கடந்த 2022 ஆம் ஆண்டு மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்திற்கு காங்கிரஸ் மற்றும் கிறிஸ்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த சட்டத்தின்படி மதமாற்றம் செய்தால் மூன்று முதல் பத்து ஆண்டுகள் வரை சிறை என்றும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி மாறி காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மதமாற்ற தடை சட்டம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. 
 
இதற்கு பாஜக மற்றும் முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். வரும் மூன்றாம் தேதியை கூறும் சட்டமன்றத் தொடரின் போது இந்த சட்டம் சட்டமன்றத்தில் அதிகாரபூர்வமாக ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்