செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம்: முதல்வரின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் மறுப்பு!

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (07:18 IST)
செந்தில் பாலாஜியின் இரண்டு துறைகளை வேறு இரண்டு அமைச்சர்களுக்கு மாற்ற முதலமைச்சர் மு க ஸ்டாலினின் பரிந்துரையை ஆளுநர் ரவி ஏற்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் அவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் உடல் நிலையை காரணம் காட்டி அவருடைய துறைகளை வேறு இரு அமைச்சருக்கு மாற்றுவதாக முதலமைச்சர் ஆளுநருக்கு பரிந்துரை செய்தார். 
 
ஆனால் அந்த பரிந்துரையை ஆளுநர் ஏற்காமல் திருப்பி அனுப்பி விட்டதாகவும் கைது செய்யப்பட்டதால் தான் செந்தில் பாலாஜியின் துறை மாற்றப்படுவதாக பதிவு செய்ய வேண்டும் என ஆளுநர் தரப்பில் கூறியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
ஆளுநரின் இந்த கருத்துக்கு அமைச்சர் பொன்மொழி காட்டும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்