ரயில்வே துறையில் குறைபாடுகளா? புகார் அளியுங்கள்.. இணையதளம் தொடங்கிய ராகுல் காந்தி..!

Mahendran
புதன், 30 அக்டோபர் 2024 (14:41 IST)
ரயில்வே துறையில் குறைபாடு இருந்தால் புகார் அளியுங்கள் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரத்யேகமாக தொடங்கி உள்ள இணையதளத்தின் முகவரியை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

தீபாவளி பண்டிகைக்கு கோடி கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்தை சந்திக்க ரயிலில் பயணம் செய்வார்கள். ரயில்வே கட்டமைப்பு தற்போது மிக மோசமாக உள்ளது. பயணிகளின் தேவையை ரயில்வே துறை பூர்த்தி செய்யவில்லை.

எனவே, ரயில்வே பயணிகள் ரயில்வே அமைப்பில் ஏதேனும் குறைபாடு கண்டால் அல்லது மேம்படுத்துவதற்கான பரிந்துரை செய்ய வேண்டும் என்றால், உங்களது அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.  

https://rahulgandhi.in/awaazbharatki  என்ற இணையதளத்தில் நீங்கள் தெரிவிக்கும் புகார்கள் மற்றும் பரிந்துரைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் இந்த முயற்சியை ரயில்வே பயணிகள் பாராட்டி வருகின்றனர்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்