தீபாவளிக்கு நாடு முழுவதும் 7000 சிறப்பு ரயில்கள்.. மத்திய அமைச்சர் தகவல்..!

Mahendran

வியாழன், 24 அக்டோபர் 2024 (18:35 IST)
தீபாவளி மற்றும் சத் பூஜையை முன்னிட்டு, நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். 
 
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வேலைக்காக தங்கியிருக்கும் பல லட்சம் பேர், பண்டிகை காலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்காக, ரயில்வே துறை இவ்வாறு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.
 
கடந்த ஆண்டு தீபாவளி மற்றும் சத் பூஜையையொட்டி 4,500 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டில் 7,000 ரயில்கள் இயக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். இதன்மூலம், தினமும் கூடுதலாக 2 லட்சம் பயணிகள் பயணம் செய்ய வாய்ப்பு உருவாகும். ரயில்களில் உள்ள நெரிசலை குறைக்கவும், மக்கள் சிரமமின்றி ஊருக்குச் செல்லவும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், சில ரயில்களில் பெட்டிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், வடக்கு ரயில்வே நிறுவனம் இந்தாண்டு மட்டும் 3,050 சிறப்பு ரயில்களை இயக்கியதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார், இது கடந்த ஆண்டின் 1,082 ரயில்களுடன் ஒப்பிடும்போது, ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாகும்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்