பங்குச்சந்தை கடந்த இரண்டு வாரங்களாக கரடியின் பிடியில் இருப்பதால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்து வரும் நிலையில், எப்போது தான் பங்குச்சந்தை காளையின் பிடிக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக இறங்கிக்கொண்டே வருகிறது. குறிப்பாக, அமெரிக்க அதிபராக டொனால்ட் பதவியேற்றது முதலே இந்திய பங்குச்சந்தை ஆட்டம் காண தொடங்கிவிட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்றும் பங்குச்சந்தை சார்ந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 82 புள்ளிகள் சரிந்து 75 ஆயிரத்து 855 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
தேசிய பங்குச்சந்தையான நிப்டி 21 புள்ளிகள் சார்ந்து 22907 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் சன் பார்மா, இண்டஸ் இன் வங்கி, டாட்டா மோட்டார்ஸ், சிப்லா, ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், எச்டிஎஃப்சி வங்கி, டைட்டான் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
அதேபோல், HCL டெக்னாலஜி, பஜாஜ் ஆட்டோ, ஸ்டேட் வங்கி, டி சி எஸ், மாருதி, ஹிந்துஸ்தான் லீவர், கோடக் மகேந்திரா வங்கி, டெக் மகேந்திரா, அப்பல்லோ ஹாஸ்பிடல், இன்ஃபோசிஸ், ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
Edited by Siva