நாளை அமாவாசை.. இன்று திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்..!

Siva
புதன், 30 அக்டோபர் 2024 (14:30 IST)
ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி மற்றும் அதன் முந்தைய நாட்களில் திருச்செந்தூரில் கடல் உள்வாங்கி வரும் நிலையில், நாளை அமாவாசை என்ற நிலையில், இன்று திடீரென திருச்செந்தூரில் கடல் உள்வாங்கி இருப்பது அந்த பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நாளை மாலை அமாவாசை தொடங்கும் நிலையில், சற்றுமுன் திருச்செந்தூர் கடல் பகுதியில் 50 அடி வரை உள்வாங்கி காணப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. நேற்று ஏற்கனவே கடல் உள்வாங்கிய நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் 50 அடி உள்வாங்கி இருப்பதாகவும், இதனால் பாசிகள் படிந்த பாறைகள் வெளியே தெரிவதாகவும் கூறப்படுகிறது.
 
 இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். இருப்பினும், திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சமின்றி கடலில் புனித நீராடி வருவதாகவும், கோவில் அருகே உள்ள கடற்கரையில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்