ஆன்லைன்ல நீட் தேர்வு நடத்த முடியாதா? – பஞ்சாப் முதல்வர் கோரிக்கை!

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (13:51 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள நிலையில் நீட் தேர்வை தள்ளி வைக்க மாநில அரசுகள் கோரிக்கை எழுந்துள்ள நிலையில் ஆன்லைன் மூலமாக நீட் தேர்வுகளை நடத்த பஞ்சாப் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் இன்னும் முடியாத நிலையில் NEET, JEE தேர்வுகள் நடத்துவதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இப்படியான இக்கட்டான சூழலில் நுழைவு தேர்வுகளை நடத்துவது ஆபத்தானது என்று மாநில அரசுகள் நுழைவு தேர்வுகளை ஒத்தி வைக்க கோரிக்கை விடுத்து வருகின்றன. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாட இருப்பதாக மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் சில தெரிவித்துள்ளன.

இந்நிலையில் நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு முன்னால் பல தேர்வுகள் இவ்வாறாக ஆன்லைனில் நடத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், இதனால் மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பாக தேர்வை நடத்த இயலும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்