மூன்றே மணி நேரத்தில் 4 லட்சம் டவுன்லோடுகள் ஆனது எது தெரியுமா?

புதன், 26 ஆகஸ்ட் 2020 (20:56 IST)
மூன்றே மணி நேரத்தில் 4 லட்சம் டவுன்லோடுகள் ஆனது எது தெரியுமா?
மூன்றே மணி நேரத்தில் 4 லட்சம் மாணவ-மாணவிகள் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோட் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஒரு பக்கம் நீட் தேர்வை கண்டிப்பாக நடத்தியே தீருவது என தேசிய தேர்வு முகமை பிடிவாதமாக உள்ளது இன்னொரு பக்கம் நீட் தேர்வை நடத்த விடமாட்டோம் என எதிர்க்கட்சி தலைவர்களும் மாநில முதல்வர்களும் தீவிரமாக உள்ளனர் 
 
இந்த நிலையில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை இன்று முதல் ஆன்லைனில் டவுன்லோடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியான மூன்றே மணி நேரத்தில் சுமார் 4 லட்சம் ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
நீட் தேர்வை எழுத மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோட் செய்து வருவதாகவும் அவர்கள் தேர்வுக்கு தயாராகி விட்டதாகவும் அரசியல்வாதிகள் வேண்டுமென்றே இதை அரசியல் ஆக்குவதாகவும் ஆளும் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்