பிஎஸ்எல்வி சி 60 என்ற ராக்கெட் வரும் 30ஆம் தேதி செலுத்தப்பட இருக்கும் நிலையில், அதன் கவுண்டவுன் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எஸ்.டி. எக்ஸ் 1, எக்ஸ்.எக்ஸ் 2 என இரண்டு சிறிய செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சுமந்து செல்லும் என்றும், ஒவ்வொன்றும் 220 கிலோ எடை கொண்டது என்றும் கூறப்படுகிறது.
பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு, முதலாவது தளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் நிலவை ஆய்வு செய்யும் என்றும், ஆய்வு மாதிரிகளுடன் பூமிக்கு திரும்ப வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமின்றி விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கவும் இந்த தொழில்நுட்ப பரிசோதனை உதவும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனை வெற்றி பெற்றால், இந்த சாதனையை செய்த உலகின் நான்காவது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும் என்று கூறிய இஸ்ரோ விஞ்ஞானிகள், விரைவில் கவுண்ட் டவுன் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.