சூரியனின் புறவெளி பகுதியை ஆய்வு செய்ய ஐரோப்பிய விண்வெளி மையத்தின் ப்ரமோ 3 என்ற செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல் வி சி59 என்ற ராக்கெட் நேற்று மாலை 4:08 மணிக்கு செலுத்தப்பட திட்டமிட்டு இருந்த நிலையில், அதற்கான கவுண்டவுன் தொடங்கியது. ஆனால் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று மாலை 4.06 மணிக்கு வெளியிடப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், சற்று முன் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல் வி சி59 என்ற ராக்கெட் செலுத்தப்பட்டதாகவும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்த ராக்கெட் மூலமாக, வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வணிக ரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டு இருப்பதாகவும், சூரியனின் ஒளிவட்ட பாதையை ஆய்வு செய்ய இந்த செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.