மோடியிடம் பல்பு வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்: தேவையா இது?

Webdunia
வியாழன், 16 மார்ச் 2017 (22:43 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக நான்கு மாநிலங்களில் ஆட்சி அமைத்தது. குறிப்பாக உத்தரபிரதேசத்தில் பெற்ற மாபெரும் வரலாற்று சாதனை வெற்றிக்கு பிரதமர் மோடியின் தனிப்பட்ட செல்வாக்கே காரணம் என்று கூறப்படுகிறது.





இந்நிலையில் பிரதமர் மோடிக்கு பலரும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிசாஸ்திரி, கிரிக்கெட் கமெண்டிரி ஸ்டைலில் மோடிக்கு  டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ரவிசாஸ்திரி கூறியது இதுதான்: 'உத்தர பிரதேசத்தின் பா.ஜ.,வின் சரித்திர வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். மோடி, அமித் ஷா ஜோடி, 300 என்ற மைல்கல்லை டிரேசர் புல்லட் வேகத்தில் கடந்தது. ‘ என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு டுவிட்டரிலேயே பதிலளித்தபிரதமர் மோடி, 'நன்றி, ஆனால் உத்தரபிரதேச வெற்றி உண்மையான ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. என நாசுக்காக ரவிசாஸ்திரிக்கு பல்பு கொடுத்தார்.

 
அடுத்த கட்டுரையில்