டிடிவி தினகரனை பழிக்கு பழி வாங்க கங்கை அமரன் போட்டியா?

Webdunia
வியாழன், 16 மார்ச் 2017 (22:19 IST)
பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய பண்ணை வீட்டை சசிகலா குடும்பத்தினர் மிரட்டி எழுதி வாங்கிவிட்டதாக கூறினார். இதனால் சசிகலா குடும்பத்தினர் மீது கடும் வெறுப்பில் இருந்த அவர் தற்போது பழிவாங்க சரியான நேரத்தை பயன்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.


 


அந்த சரியான சந்தர்ப்பம் ஆர்.கே.நகரில் டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிடுவது தான் என்று கூறப்படுகிறது. ஆம் சமீபத்தில் பாஜகவில் இணைந்த கங்கை அமரன், ஆர்.கே.நகரில் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் கங்கை அமரன் வெற்றி பெற நிச்சயம் வாய்ப்பு இலை என்றாலும் வாக்குகளை பிரித்தாலே தினகரனின் வெற்றியை தடுத்துவிடலாம் என்பதுதான் பாஜகவின் திட்டமாக இருக்கக்கூடும்.

மேலும் ஆர்.கே.நகர் தேர்தலில் சசிகலா அதிமுக வேட்பாளராக டிடிவி தினகரன், ஓபிஎஸ் அதிமுக வேட்பாளராக மதுசூதனன், திமுக வேட்பாளராக மருது கணேஷ், தேமுதிக வேட்பாளராக மதிவாணன், எம்ஜிஆர்-அம்மா- தீபா பேரவையின் தீபா போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்