பொதுமக்கள் மீது கல்வீசிய நபரை கட்டி வைத்து உதைத்த போலீஸார்!

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (16:23 IST)
பொதுமக்கள் மீது கல்வீசிய நபரை கட்டி வைத்து உதைத்த போலீஸார்!
மத நிகழ்ச்சியின்போது கலவரத்தை உண்டாக்கும் நோக்கத்துடன் பொதுமக்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய இளைஞரை மின்கம்பத்தில் கட்டி வைத்து போலீசார் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
குஜராத் மாநிலத்தில் நவராத்திரி பண்டிகை நடந்து கொண்டிருக்கும் போது திடீரென அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பொதுமக்கள் மத்தியில் கல்வீசி தாக்குதல் நடத்தினார். இதனையடுத்து இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது 
 
இந்த நிலையில் மோதலுக்கு காரணமானவர்களி கண்டுபிடித்த போலீசார் அவர்களை மின்கம்பத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கினார். கைது செய்யப்பட்ட ஒவ்வொருவரையும் மின்கம்பத்தில் கட்டி வைத்து போலீசார் தாக்கிய சம்பவத்தில் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
இந்த சம்பவத்திற்கு உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் மீது கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்