கோயில்களுக்குள் நுழைந்ததற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்.

வியாழன், 6 அக்டோபர் 2022 (15:09 IST)
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள லம்பா கிராமத்தில் உள்ள ஒரு கோயிலுக்குள் நுழைந்த தலித் குடும்பத்தினர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ பரவலாகி வருகிறது.

நாகரிகம் எவ்வளவு வளர்ந்தும், தொழில் நுட்பங்கள் எத்தனை வேகமாக வளர்ந்து மனிதனை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு சென்றாலும், இன்னும் மனிதர்கள்  சக மனிதர்களை கொடுமைப் படுத்துவதில்லை விடவில்லை என்று சில சம்பவங்கள் மூலம் தெரிகிறது.

அதன்படி, ராஜஸ்தான் மாநிலம்  நாகெளர் என்ற மாவட்டத்தில் உள்ள லம்பா ஜாதன் என்ற கிராமத்தில் ஒரு கோயிலில் நுழைந்ததற்காக தலித் குடும்பத்தினர் மீது அந்த ஊரைச் சேர்ந்த சிலர் கொடூர தாக்குதல் டனடத்தினர்.

இதுகுறித்து,வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்துகின்றனர், தங்கள் விடும்படி கெஞ்சியும்கூட மீண்டும் தாக்குதல் நடத்தும் வீடியோ அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Sinoj

"இந்து மதம் ஒரு மதமே அல்ல, அது ஒரு அடக்குமுறைக் கருவி, அழிவைத்தரும் தொற்றுநோய் இதை ஒழிக்காமல் இந்தியாவிற்கு விடிவில்லை."

~ அண்ணல் அம்பேத்கர்

ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் மாவட்டத்தில் உள்ள லம்பா ஜாதன் கிராமத்தில் கோயில்களுக்குள் நுழைந்ததற்காக #தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல். pic.twitter.com/Q8C2pEb0Bw

— Dr. Nagajothi

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்