பாகிஸ்தான் ஆர்டர் குடுத்ததும் அட்டாக் பண்ண ப்ளான்! பிடிபட்ட பயங்கரவாதிகள் அதிர்ச்சி வாக்குமூலம்!

Prasanth Karthick
புதன், 22 மே 2024 (10:06 IST)
சமீபத்தில் குஜராத் விமானநிலையத்தில் பிடிபட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



உலகளவில் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்ட அமைப்புகளில் ஒன்று ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு. இதன் உறுப்பினர்கள் பல நாடுகளிலும் பரவியுள்ள நிலையில் பல நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருந்து வருகிறது. கடந்த 20ம் தேதி குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் இலங்கை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டது.

அவர்களிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்தியாவில் சில இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு அவர்கள் வந்திருந்ததாகவும், தாக்குதல் நடத்துவது குறித்து பாகிஸ்தான் ஐ.எஸ் அமைப்பிலிருந்து வரும் உத்தரவுக்காக காத்திருந்ததாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்