மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை விடுத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கடந்த மூன்று நாட்களாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று நான்காவது நாளாகவும் மக்களவை எம்பிக்களின் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதமர் மோடி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் இயற்றவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எதிர் கட்சிகளின் கடும் காரணமாக இன்று மதியம் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்
இரண்டு மணிக்கு மீண்டும் கூடினாலும் நாடாளுமன்றம் மீண்டும் அமளியில் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது