ஞானவாபியை அடுத்து குதுப்மினாரிலும் அகழாய்வு நடத்தப்படுகிறதா?

Webdunia
திங்கள், 23 மே 2022 (10:09 IST)
ஞானவாபியை அடுத்து குதுப்மினாரிலும் அகழாய்வு நடத்தப்படுகிறதா?
ஞானவாபி மசூதியில் சமீபத்தில் அகழாய்வு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது குதுப்மினாரிலும் அகழாய்வு நடத்தப்போவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஞானவாபி மசூதியை தொடர்ந்து குதுப்மினார் வளாகத்தில் அகழாய்வு நடத்த தொல்லியல் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.
 
இந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு நிலையில் இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. குதுப்மினார் வளாகத்தில் அகழாய்வு நடத்தும் எந்த திட்டமும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது. இதனை அடுத்து தற்போது அந்த பகுதியில் ஏற்பட்ட பரபரப்பு நீங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்