காங்கிரசை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட்டுக்கும் நோட்டீஸ்..! 11 கோடி செலுத்த உத்தரவு..!!

Senthil Velan
வெள்ளி, 29 மார்ச் 2024 (18:06 IST)
காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து ரூ.11 கோடி வரி பாக்கியை செலுத்துமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
 
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 135 கோடியை ஏற்கனவே வருமான வரித்துறை முடக்கியுள்ள நிலையில், தற்போது ரூ. 1823.08 கோடி அபராதம் கட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 
 
கடந்த 8 ஆண்டு பழைய வருமான வரியை மீண்டும் ஆய்வு செய்து ரூ.1,823 கோடி வரி பாக்கியை கட்டச் சொல்வது விதிமீறல் என காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில் ரூ. 11 கோடி வருமான வரி நிலுவையில் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பழைய பான் எண்ணை பயன்படுத்தியதற்கு ரூ. 11 கோடி வரி பாக்கியை செலுத்த வேண்டும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ: தொண்டர்களின் உழைப்பால் பாஜக வளர்கிறது..! பிரதமர் மோடி புகழாரம்.!!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்தியா கூட்டணிக் கட்சிகளை முடக்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்