தொண்டர்களின் உழைப்பால் பாஜக வளர்கிறது..! பிரதமர் மோடி புகழாரம்.!!

Senthil Velan
வெள்ளி, 29 மார்ச் 2024 (17:45 IST)
தொண்டர்களின் கடின உழைப்பால் பாஜக வளர்கிறது என்று காணொளி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
 
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட மக்களவைத் தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் எனது பூத் வலிமையான பூத் என்ற தலைப்பில் மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக கலந்துரையாடினார்.
 
தொண்டர்களின் கடின உழைப்பால் பாஜக வளர்கிறது என பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.  பூத் நிலவரம் குறித்து மோடி இந்தியில் கேட்க தமிழில் மொழிபெயர்த்து தொண்டர்கள் பதில் அளித்தனர்.
 
மத்திய அரசின் எந்த திட்டம் வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறித்தும், காசியில் தமிழர் பெருமைகளை கொண்டாடியது உள்ளூர் மக்களிடம் சென்றடைந்ததா என்பது குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்தார். பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்றும் அவர் கூறினார். 

ALSO READ: வாசனின் தமாகாவுக்கு என்ன தகுதி இருக்கிறது..! அமைச்சர் பொன்முடி சரமாரி கேள்வி..!!

மத்திய அரசின் எந்த திட்டம் பெண்களிடம் அதிக வரவேற்பு பெற்றுள்ளது என பிரதமர் கேள்வி கேட்க, அதற்கு பதில் அளித்த பாஜக பெண் நிர்வாகி ஒருவர், மத்திய அரசின் ஜல் ஜீவன், உஜ்வாலா சிலிண்டர் திட்டம்  பெரும் வரவேற்பை  பெற்றுள்ளதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்