திருடன் எனக் கூறுவதா ? – மல்லையாவுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர்

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (13:46 IST)
பல்வேறு பொதுத் துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதைத் திருப்பி கட்டாமல் லண்டனுக்குத் தப்பியோடினார் கிங் ஃபிஷர் நிறுவன முதலாளி விஜய் மல்லையா.

இதனால் இந்திய வங்கிகளின் நிதிநிலை பெரிதாகப் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் மீது பலப் பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
அவரின் மீதான வழக்கைத் தற்போது சி பி ஐ விசாரித்து வருகிறது. மேலும் லண்டலிலும் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு நடைபெற்று வருகிறது. அவரது 13,900 கோடி சொத்துகளையும் அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு வரமறுக்கும் அவரை தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளி குற்றவாளியாக இந்தியா அறிவித்துள்ளது.

இது சம்மந்தமாக லண்டனில் நடந்த வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்த அனுமதி அளித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது அவரை நாடு கடத்தும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் நிதின் கட்கரி விஜய் மல்லையாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளது மிகுந்த சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

நேற்று தனியார் நிறுவனம்  ஒன்று ஒருங்கிணைத்த பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட நிதின் கட்காரி விஜய் மல்லையாக் குறித்து பேசியுள்ளார். அதில் ‘40 ஆண்டுகளாக விஜய் மல்லையா அவர் வாங்கிய வங்கிக் கடன்களுக்கு சரியான நேரத்தில் வட்டியை செலுத்திவந்தார்.விமானத் தொழிலில் நுழைந்த பின்னர் அவர் பிரச்சினைகளை சந்திக்க ஆரம்பித்தார். அப்புறம் திடீரென அவரை திருடனாக்கிவிட்டனர்? ஒரு நபர் 50 ஆண்டுகள் சரியாக வங்கிக் கடனை செலுத்திவிட்டு ஒரே ஒரு முறை செலுத்தத் தவறினால் அவரை ஏமாற்றுக்காரர் என்று கூறுவதா?’ என கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்