எம்பிபிஎஸ் முடித்தால் மட்டும் டாக்டராகிவிட முடியாது: புதிய மசோதா தாக்கல்

Webdunia
சனி, 30 டிசம்பர் 2017 (04:08 IST)
மருத்துவ கல்வியை முடித்த எம்பிபிஎஸ் மாணவர்கள் உடனே டாக்டராக முடியாத வகையில் அவர்கள் டாக்டராக தொழில் புரிய தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற புதிய மசோதா, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் மருத்துவம் பயின்று வரும் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

மருத்துவ கல்வியை நிர்வகிக்க செயல்பட்டு கொண்டிருக்கும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக ‘தேசிய மருத்துவ ஆணையம்’ என்ற அமைப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதாவை நேற்று பாராளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா தாக்கல் செய்தார்

இந்த மசோதாவுக்கு வழக்கம் போல் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை நிராகரித்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மசோதாவை தாக்கல் செய்ய அனுமதி கொடுத்தார்.

மருத்துவ கல்வி  குறித்த புகார்கள் அதிகம் வருவதால் மருத்துவ கல்வியை சீர்திருத்தவே இந்த புதிய மசோதா என்றும், மருத்துவ கல்வியை முடித்தவர்கள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே டாக்டராக தொழில் புரிவதற்கான உரிமம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்