சிறுபாண்மையினரின் நம்பிக்கையைப் பெற வேண்டும் – கட்சியினருக்கு மோடி அறிவுரை !

Webdunia
ஞாயிறு, 26 மே 2019 (12:48 IST)
இரண்டாவது முறையாகப் பிரதமராக ஆட்சி அமைக்க இருக்கும் மோடி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் சிறுபாண்மையினரின் நம்பிக்கையைப் பெறுவதற்காக உழைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

17 ஆவது மக்களவைத் தேர்தலில் 350 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க இருக்கிறது. தென் இந்தியாவில் குறிப்பிடத்தகுந்த வெற்றிப் பெறாமலேயே பாஜக இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது . இந்த தேர்தலில் காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.

இந்நிலையில் குடியரசுத் தலைவரை சந்தித்து மீண்டும் ஆட்சி அமைப்பது சம்மந்தமாகப் பேசியுள்ளார். அதன் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாராளுமன்ற எம்பிக்களோடு மோடி உரையாடினார். அதில் ‘முந்தைய அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையால் முந்தைய ஆட்சியாளர்களையே மீண்டும் தேர்வு செய்துள்ளனர். நாம் நமக்கு வாக்கு அளித்தவர்களுக்கும் வாக்கு அளிக்காதவர்களுக்கும் சேர்த்து வேலை செய்ய வேண்டும்.’சிறுபான்மையினர் வாக்கரசியலில் ஈடுபட்டுள்ளவர்களால் அச்சத்தில் உள்ளனர். நீங்கள் அந்த அச்சத்தைப் போக்கி அவர்களின் நம்பிக்கையைப் பெறவேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்