தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

Mahendran

சனி, 23 நவம்பர் 2024 (15:25 IST)
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தனது குளிர் கால அட்டவணையில், தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும்  வாராந்திர விமானங்களின் எண்ணிக்கையை 107ல் இருந்து 140 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தமிழ்நாட்டில் இருந்து விமான சேவையை விரிவுப்படுத்தும் வகையில் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது!
4 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் விமான சேவை குளிர்கால அட்டவணையில் சென்னை, மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளியிலிருந்து ஏறக்குறைய 140 வாராந்திர விமானங்கள் இயக்கப்படுகின்றன.
 
சென்னை, 23 நவம்பர்-2024: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது விமான சேவையில் குளிர்கால கால அட்டவணையின் ஒரு பகுதியாக சென்னை, மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளியில் இருந்து தனது விமான சேவைகளை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது வாராந்திர விமானங்களின் எண்ணிக்கையை 107-ல் இருந்து தோராயமாக 140 விமானங்களாக ஆக அதிகரித்துள்ளது. இந்த செயல்பாட்டு நடவடிக்கையானது தமிழ்நாட்டில் இருந்து பயணம் மேற்கொள்ளும் விமானப் பயணிகளுக்கு சௌகரியமான வகையில் இணைப்பு மற்றும் மேம்பட்ட வசதிகளை வழங்கும். இந்த விரிவாக்க நடவடிக்கையில் சென்னை, ஜெய்ப்பூர், கோவா, புனே மற்றும் ஸ்ரீ விஜய புரம் (போர்ட் பிளேர்) ஆகிய நகரங்களுடன் இணைக்கும் புதிய நேரடி வழித்தடங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தமிழ் நாட்டில் உள்ள விமான நிலையங்களில் இருந்து விமான சேவைகள் அதிகரித்து வருவது குறித்து கருத்து தெரிவித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி டாக்டர். அங்கூர் கர்க் [Dr. Ankur Garg, Chief Commercial Officer, Air India Express] கூறுகையில், "தமிழ் நாட்டில் இருந்து பரவலாக உள்ள நகரங்களில் இருந்து எங்களது விமான சேவை செயல்பாடுகளை விரிவுபடுத்துவதன் மூலம், இந்தியாவின் இதரப் பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் சிங்கப்பூருடன் இணைப்பதோடு, இந்த பிராந்தியத்தில் எங்களது சேவைகளில் நாங்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறோம், சென்னையில், இப்போது 100 வாராந்திர விமானங்கள் இயக்கப்படுகின்றன. 
 
இந்த விமானங்கள் சென்னையை 11 உள்நாட்டு நகரங்கள், சிங்கப்பூர் மற்றும் மத்திய கிழக்கின் பல்வேறு நகரங்களுடன் நேரடியாக இணைக்கின்றன. சென்னையிலிருந்து விமான சேவை இணைப்பை மேம்படுத்துவதற்காக நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஜெய்ப்பூர், புனே, கோவா மற்றும் போர்ட் ப்ளேர் ஆகிய இடங்களுக்கு எங்கும் நிற்காத நேரடியாக விமானங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இச்சேவையின் மூலம் மெட்ரோ நகரத்தை வளர்ந்து வரும் நகர்ப்புற பகுதிகள் மற்றும் பிரபலமான சுற்றுலா தலங்களுடன் இணைக்கிறோம். 
 
திருச்சிராப்பள்ளியில் இருந்து விமானங்களை இயக்கும் மிகப்பெரிய சர்வதேச விமான சேவை நிறுவனம் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். எங்களது புத்தம் புதிய போயிங் 737-8 விமானங்களில் ஒன்று, பாரம்பரிய காஞ்சீவரம் வடிவமைப்பு அம்சத்தினால் ஈர்க்கப்பட்டு, விமான வெளிப்புறத்தில் ப்ராண்டிங் அடையாளமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. எங்கள் விருந்தினர்களுக்கு அன்பான இந்திய விருந்தோம்பலை வழங்கும் அதே வேளையில், தமிழ்நாட்டின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடுவதில் நாங்கள் கொண்டிருக்கும் அக்கறையையும், அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.
 
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விரிவாக்கம் செய்து வரும் நெட்வொர்க்கில் குளிர்கால அட்டவணை கடந்த ஆண்டை விட 30% அதிகரித்துள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் செயல்பாடுகளில் இருக்கும் விமானங்களின் எண்ணிக்கை தற்போது 90-க்கும் அதிகமாக இருப்பதால் இது போன்ற விரிவாக்கம் எளிதில் சாத்தியமாகி இருக்கிறது. இந்த குளிர்காலத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 400-க்கும் மேற்பட்ட தினசரி விமானங்களை இயக்கி வருகிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதே காலத்தில் 325 தினசரி விமானங்களை மட்டுமே இயக்கியது. மேம்படுத்தப்பட்ட அட்டவணையில் டெல்லி இந்தூர், கொச்சி புனே மற்றும் விசாகப்பட்டினம் விஜயவாடா போன்ற புதிய வழித்தடங்களும் அடங்கும். இவற்றுடன் கூடுதலாக, இந்த குளிர்கால அட்டவணையில் டெல்லி மற்றும் ஸ்ரீநகருடன் நேரடியாக இணைக்கும் புதிய நிலையமாக ஜம்முவை விமான நிறுவனம் தனது சேவையில் இணைத்துள்ளது. அபுதாபி, ராஸ் அல்-கைமா மற்றும் மஸ்கட் ஆகியவற்றை இணைக்கும் சர்வதேச வழித்தடங்களில் விமானங்களின் சேவை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து:
 
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து ஏறக்குறைய 101 வாராந்திர விமானங்களை இயக்கி வருகிறது. பாக்டோக்ரா, பெங்களூரு, புவனேஸ்வர், கோவா, குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொச்சி, கொல்கத்தா, புனே மற்றும் திருவனந்தபுரம் உட்பட 11 உள்நாட்டு நகரங்களையும், தம்மாம், குவைத் மற்றும் சிங்கப்பூர் ஆகிய 3 சர்வதேச இடங்களையும் நேரடியாக இணைக்கிறது. கூடுதலாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், அகர்தலா, அயோத்தி, டெல்லி, இம்பால், இந்தூர், கண்ணூர், கோழிக்கோடு, லக்னோ, மங்களூரு, மும்பை, ராஞ்சி, ஸ்ரீநகர், ஸ்ரீ விஜய புரம் (போர்ட் ப்ளேர்), சூரத், வாரணாசி, விஜயவாடா, மற்றும் விசாகப்பட்டினம் அகிய 17 உள்நாட்டு இடங்களுக்கும்,அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா உள்ளிட்ட மூன்று சர்வதேச இடங்களுக்கும் ஒன் - ஸ்டாப் இணைப்பு சேவையை வழங்கி வருகிறது.
 
மதுரையிலிருந்து:
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து ஆறு வாராந்திர விமானங்களை இயக்குகிறது. மேலும் இங்கிருந்து சர்வதேச இடமான சிங்கப்பூருக்கு நேரடியாக விமான சேவையை வழங்குகிறது.
 
திருச்சிராப்பள்ளியிலிருந்து:
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திருச்சிராப்பள்ளியிலிருந்து 34 வாராந்திர விமானங்களை இயக்குகிறது. அதேபோல் அபுதாபி, தோஹா, துபாய், குவைத், மஸ்கட், ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட ஏழு சர்வதேச இடங்களுக்கும் நேரடியாக விமான சேவையை அளிக்கிறது.
 
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்