அதாவது பாஜக தனித்தே 301 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. கூட்டணியோடு சேர்த்து 349 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சி தனித்து 50 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது, கூட்டணியோடு 89 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. மற்றவை 104 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன.
ஆனால், இப்போது காங்கிரஸ் 50 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளதால், எதிர்கட்சி என்னும் அந்தஸ்து பெறுவதே சிக்கலாகி உள்ளது. இந்த சிக்கலில் இருந்து காங்கிரஸ் தப்பிக்க இன்னும் 5 தொகுதிகளில் முன்னிலை பெறுவதோடு வெற்றியும் பெற வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.