இந்தியர்களே இந்தியாவுக்கு சுற்றுலா வாருங்கள் – மோடி அழைப்பு !

Webdunia
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (08:39 IST)
வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா வருவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அரசுமுறைப் பயணமாக அமெரிக்க சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் இந்தியர்களுடன் உரையாற்றிய பின் ஹூஸ்டன் நகரில் உள்ள காந்தியடிகள் அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்ட சென்ற அவர் அங்குள்ள அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் பேசினார்.

அப்போது ‘ இந்த அருங்காட்சியகம் அமெரிக்காவில் ஒரு மைல்கல்லாக இருக்கும். காந்தியடிகளின் சிந்தனைகளை இளைஞர்கள் மத்தியில் பரப்புவதற்கு நிச்சயம் உதவும். இந்தியர்களாகிய நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும். ஆண்டுதோறும் 5 குடும்பங்களாவது இந்தியாவுக்கு சுற்றுலா வரவேண்டும். உங்களுக்குள்ளாகவே ஆலோசித்து நல்ல முடிவை எடுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்