அமெரிக்காவில் உள்ள இந்தியர்களிடம் இந்தியாவின் வளர்ச்சி, அமெரிக்க வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு குறித்து மட்டும் பேசியிருந்தால் போதுமே! எதற்காக அதிபர் ட்ரம்ப்புக்கு ஆதரவு தெரிவித்து 50000 மக்கள் கூடியிருக்கும் இடத்தில் பேச வேண்டும் என மோடியின் பேச்சுக்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஹவுடி மோடி நிகழ்ச்சி மூலம் மறைமுகமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு வாக்கு சேகரிக்கிறார் மோடி என்று பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் ட்விட்டரில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் ராஜ்ய சபா உறுப்பினரும், முன்னாள் கேபினேட் அமைச்சருமான ஆனந்த் சர்மா “பிரதமர் மோடி அவர்களே நீங்கள் அமெரிக்காவிற்கு இந்திய பிரதமராக சென்றிருக்கிறீர்கள். அமெரிக்க தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.