மெட்ரோ ரயில் நிலையத்தின் சுவர் இடிந்து இளம்பெண் பலி!

Webdunia
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (08:00 IST)
சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை விழுவதில் சதமடிக்க உள்ள நிலையில் ஐதராபாத் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றில் இடிந்து விழுந்த சுவரால் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார் 
 
 
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த மெளனிகா என்பவர் தனது தோழியுடன் வெளியில் செல்வதற்காக கிளம்பினர். பேருந்து அல்லது ஆட்டோவில் செல்வதற்கு அவர்கள் முடிவு செய்திருந்த நிலையில் மோனிகாவின் கணவரோ மெட்ரோவில் செல்லுங்கள் அது தான் பாதுகாப்பு ஏற்கும் என்று அறிவுறுத்த இருவரும் அமீர்பேட் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். 
 
 
அந்த ரயில் நிலையத்தில் நடைபாதையில் ரயிலுக்காக காத்திருந்த கொண்டிருந்த நிலையில்  திடீரென செங்குத்தாக சுவர் இடிந்து மோனிகா தலையில் விழுந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த மௌனிகா ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்துவிட்டது
 
 
இதுகுறித்து ஹைதராபாத் மெட்ரோ இயக்குனர் ரெட்டி என்பவர் கூறியபோது `மெட்ரோ கான்கிரீட் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் இளம் பெண் உயிரிழந்துள்ளது மிகவும் துர்திர்ஷ்டவசமானது. விபத்து நடந்த காரணம் பற்றி மிகவும் தீவிரமாக விசாரணை நடத்திவருகிறோம். ஹைதராபாத்தில் உள்ள அனைத்து , மெட்ரோ நிலைய கட்டடங்களின் தன்மையையும் பரிசோதிக்கக் கூறியுள்ளேன்.  இறந்த இளம் பெண்ணுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அரசை நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம்” 
 
 
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் தனது இளம் மனைவியை இழந்து தவிக்கும் மோனிகாவின் கணவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் அவரது உறவினர்கள் தவித்து வருகின்றனர். மழை பெய்ததால் சுவர் வலுவிழந்து இருண்டதாகவும், இதனால் தான் சுவர் இடிந்து விழுந்து விட்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோன்ற விபத்துக்கள் இனியும் நிகழாமல் இருக்க மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து சுவர்களையும் பரமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று என்று கோரிக்கை எழுந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்