பாஜக இருக்கும் வரை ஸ்டாலின் முதல்வராக முடியாது: முரளிதரராவ்

Webdunia
ஞாயிறு, 23 பிப்ரவரி 2020 (09:03 IST)
பாஜக பிரமுகரும் தமிழக பாஜக பொறுப்பாளருமான முரளிதரராவ் நேற்று தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார். கிருஷ்ணகிரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்ட பின்னர் பாஜகவில் இணைந்தவர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். நேற்று முரளிதரராவ் மு பாஜகவில் இணைந்தவர்களில் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சி ஒன்றில் முரளிதரராவ் பேசியபோது ’தமிழகத்தில் பாஜக இருக்கும் வரை திமுக தலைவர் முக ஸ்டாலினை முதல்வராக விடமாட்டோம் என்று அவர் ஆவேசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மேலும் முக ஸ்டாலின் அதிர்ஷ்டம் இல்லாத ஒருவர் என்றும் அவர் பிரதமர் மோடியை பற்றியே பேசிக் கொண்டிருந்தால் எவ்வாறு முதல்வராக முடியும் என்றும் தனது கட்சியின் பெருமை குறித்தும் தாங்கள் கட்சி ஆட்சியில் இருந்தபோது செய்த சாதனையும் குறித்து பேசாமல் மூன்று வேளையும் அவர் பிரதமரை விமர்சனம் செய்வதையே முழு நேரத் தொழிலாக கொண்டிருக்கின்றார் என்றும், இவ்வாறு இருந்தால் அவர் எப்படி முதல்வராக முடியும் என்றும் கூறினார்
 
பாஜக இருக்கும் வரை ஸ்டாலின் முதல்வராக முடியாது: முரளிதரராவ்
டெல்லியில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் கூட மோடியை தற்போது விமர்சனம் செய்வதில்லை என்றும் ஆனால் தமிழகத்தில் இருக்கும் முக ஸ்டாலின் எப்போதும் பிரதமரை விமர்சனம் செய்துகொண்டே இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்
 
மேலும் தமிழகத்தில் பாஜக இருக்கும்வரை முக ஸ்டாலினை முதல்வராக்க விடமாட்டோம் என்று கூறிய அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மோடியின் கைப்பாவை என ஸ்டாலின் விமர்சனம் செய்து கொண்டிருப்பதாகவும் கைப்பாவையாக முதல்வரை பிரதமர் வைத்துக் கொள்வதில் ஒன்றும் தவறு இல்லை என்றும் அவர் தெரிவித்தார் 
 
மேலும் குடியுரிமை சட்டம் இஸ்லாமியருக்கு எதிரானது அல்ல மாறாக இஸ்லாமியருக்கு நன்மைபயக்கும் ஒரு சட்டம் என்றும் அவர் கூறினார் முரளிதரராவ் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்