தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய எல்லை வனப்பகுதிகளில் 20 ஆண்டுகளாக யானை தந்தங்களை கடத்தி சட்ட விரோத செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காகவும், மேலும் போலீஸ், வனத்துறையினர் உள்ளிட்ட 180 பேரை கொலை செய்த குற்றத்திற்காகவும் சந்தன கடத்தக் வீரப்பனை பிடிக்க ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார் தலைமையில் சிறப்பு அதிரடிப்படை நியமிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த 2004 ஆம் ஆண்டு, தர்மபுரி பாப்பாரப்பட்டி கிராமத்தில் அதிரடி படையிடம் சிக்கிய வீரப்பன் மற்றும் அவரது குழுவினர் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினர். அதற்கு அதிரடி படையும் திரும்ப சுடவே, சம்பவ இடத்திலேயே வீரப்பன் உயிரிழந்தார்.