அமலாக்கத்துறை இயக்குனர் யாராக இருந்தாலும் ரெய்டு தொடரும்: அமித்ஷா

Webdunia
புதன், 12 ஜூலை 2023 (13:01 IST)
அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் மிஸ்ராவின் பதவி காலம் முடிந்த பின்னர் மூன்று முறை பதவி நீடிப்பு வழங்கியது செல்லாது என்று உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ள நிலையில் அமலாக்கத்துறை இயக்குனர் யார் என்பது முக்கியமல்ல என்றும் அமலாக்கத்துறை இயக்குனர் யாராக இருந்தாலும் ரெய்டு தொடரும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை இயக்குனராக சஞ்சய் மிஸ்ரா மூன்றாவது முறை பதவி நீடிப்பு வழங்கியது செல்லாது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 
 
இந்த நிலையில் இது குறித்து உள்துறை அமைச்சர் கூறிய போது அமலாக்கத்துறை இயக்குனர் யார் என்பது முக்கியமல்ல என்றும் இயக்குனராக யார் பொறுப்பேற்றாலும் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் நபர்கள் மீதான ரெய்டு தொடரும் என்றும் வாரிசு அரசியலில் ஊழலை இருப்பவர்கள் மீது அமலாக்கத்துறை சோதனை செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார் அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்