நான் முதலமைச்சரா..? என்கிட்ட இப்படி கேக்கலாமா? - எகிறிய புஸ்ஸி ஆனந்த்!

Prasanth Karthick

வெள்ளி, 28 மார்ச் 2025 (09:47 IST)

புஸ்ஸி ஆனந்தை அடுத்த முதல்வர் என கூறி ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

 

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் சட்டமன்ற தேர்தலை குறி வைத்து தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக செயலாற்றி வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

 

இதற்காக ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்றில் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சரே என புஸ்ஸி ஆனந்தை வரவேற்று வாசகங்கள் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது தாங்கள் ஒட்டிய போஸ்டர் இல்லையென்றும், வேறு கட்சியினர் வேண்டுமென்றே தங்கள் பெயரில் போஸ்டர் அடித்து ஒட்டி குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் தவெகவினர் கூறியுள்ளனர்.

 

இதுகுறித்து செய்தியாளர்கள் “நீங்கதான் அடுத்த முதலமைச்சர் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதே?” என புஸ்ஸி ஆனந்திடம் கேட்க, அதற்கு ஆவேசமாக பதிலளித்த அவர் “யாரு நான் அடுத்த முதலமைச்சரா? என்கிட்ட இப்படி ஒரு கேள்விய கேக்கலாமா? யாரோ சில விஷமிகள் திட்டமிட்டே இப்படி போஸ்டரை ஒட்டியிருக்கிறார்கள். அதை வைத்து என்னிடம் இப்படி கேட்கலாமா? 2026ல் தமிழக முதல்வராக யார் வரப்போகிறார் என்று உங்களுக்கும் தெரியும். கோடிக்கணக்கான மக்களால் தேர்வு செய்யபட்டு தளபதிதான் முதல்வராக வரப்போகிறார் என்பது நிச்சயம். நான் தவெகவின் கோடான கோடி தொண்டர்களில் ஒருவன். வேண்டுமென்றே சில விஷமிகள் 5, 6 போஸ்டர்களை ஒட்டியதை வைத்துக் கொண்டு நீங்கள் இப்படி கேட்கலாமா?” என பதில் அளித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்