செப்டம்பரில் முடிவுக்கு வருகிறதா கொரோனா? – நிபுணர்கள் கணிப்பு!

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (08:11 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இது செப்டம்பரில் முடிவுக்கு வரலாம் என மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு இருந்து வருகிறது. எனினும் ஜனவரி மாதத்திலேயே கொரோனா தொற்றுகள் இந்தியாவில் பரவ தொடங்கியிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்புகளில் 7ம் இடத்தில் இருந்த இந்தியா தற்போது இத்தாலியையும் முந்திக்கொண்டு 6ம் இடத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் செப்டம்பரில் முடிவுக்கு வரும் என சுகாதார அமைச்சகத்தின் நிபுணர்கள் இருவர் கணித்துள்ளனர். குறுகிய கால ஆய்வின் அடிப்படையில் கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையுடன், இறப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கைகள் சமநிலையை அடையும்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வரும் என அவர்கள் கணித்துள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் குணமடையும் வரையிலோ அல்லது இறக்கும் வரையிலோ கொரோனாவை மற்றவருக்கு பரப்புகிறார். அதன்படி குணமடையும் நாள் எண்ணிக்கை மற்றும் விகிதம் மற்றும் இறப்பு விகிதம் ஆகியவற்றை கொண்டு இந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்