தற்காலிக ஊழியர்களுக்கும் பேறுகால விடுப்பு: சமக்ர சிக்‌ஷா அறிவிப்பு

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (13:33 IST)
இதுவரை நிரந்தர ஊழியர்களுக்கு மட்டுமே பேறுகால விடுப்பு விடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தற்கால ஊழியர்களுக்கும் பேறுகால விடுப்பு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறையின் சமக்ரா சிக்‌ஷா  உத்தரவு பிறப்பித்துள்ளது
 
இந்த உத்தரவின்படி ஓராண்டுக்கு மேல் தாற்காலிகமாக பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் மூன்று மாத குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருபவர்கள் மற்றும் கருக்கலைப்பு செய்தவர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்றும் இந்த விடுப்பு மூன்று மாதகாலம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த அறிவிப்புக்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்