மகளிர் பேறுகால விடுப்பு 12 மாதமாக உயர்வு !!!

வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (12:31 IST)
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் இன்று முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் நடைபெறுகிறது.


மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும். தற்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்து வருகிறார். இந்நிலையில் சுகாதாரத்துறைக்கு தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரங்கள் பின்வருமாறு... 
 
1. மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறைக்கு மொத்தம் ரூ.18,933.20 கோடி நிதி ஒதுக்கீடு
2. தமிழ்நாடு சித்தா பல்கலைகழகம் அமைக்க முதற்கட்டமாக ரூ.2 கோடி ஒதுக்கீடு
3. முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு ரூ.1,046.09 கோடி நிதி ஒதுக்கீடு
4. 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 1.303 ஆக அதிகரிக்கப்படும்
5. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டத்திற்கு ரூ.959.20 கோடி நிதி ஒதுக்கீடு
6. மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்